ஜார்க்கண்ட் ரோப் கார் விபத்து! பலியானோர் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடு.! - Seithipunal
Seithipunal


ஜார்கண்ட் மாநிலம் தேவ்கர் மாவட்டத்திலுள்ள பாபா வைத்தியநாத் கோயிலின் இரு ரோப் கார்கள் அந்திரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக ஜார்கண்ட் அரசு தெரிவித்துள்ளது.

தேவ்கர் நகரின் பிரபலமான பாபா வைத்தியநாத் இருந்து திரீகுட் மலைப் பகுதியில் இரண்டு ரோப் கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் 100 அடி உயரத்தில் அனைத்து ரோப் கார்களும் நடுவழியில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தன. தகவலறிந்து வந்த விமான படையினர் சிக்கிய பயணிகளை மீட்டனர்.

இதில் 3 பேர் பலியாகினர். இந்த ரோப் கார் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என ஜார்க்கண்ட் அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jarkhand rope car accident 5 lakh compensation


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->