பிரசாரத்தில் குவாட்டர், கோழி பிரியாணியுடன் ரூ. 300... ஓய்.எஸ்.ஆர் மீது பரபரப்பு புகார்.!  - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்து வரப்படும் ஆண்களுக்கு குவாட்டர், கோழி பிரியாணி உடன் ரூ. 500 வரை வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிரசாரத்தில் ஈடுபடும் அரசியல் கட்சியினருக்கு இரவு நேரங்களில் மது வழங்கப்படுவதால் ஆந்திர மாநிலத்தில் பல கோடி ரூபாய்க்கு அரசியல் கட்சியினர் மதுவாங்கி பதுக்கி வைத்துள்ளனர். 

இந்நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி கர்னூல் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வேட்பாளர்கள் சார்பில் பல ஊர்களில் இருந்து பொதுமக்கள் வாகனங்களில் அழைத்து வரப்பட்டனர். 

கூட்டத்தில் ஜெகன்மோகன் ரெட்டி பேசிக்கொண்டிருந்தபோது, ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் ஆண்களுக்கு குவாட்டர், கோழி பிரியாணி, ரூ. 300 முதல் 500 வரை வழங்கியுள்ளனர். 

இதனை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சியினர், ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர். இதனால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jagan Mohan reddy campaign issue


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->