2040-இல் நிலவில் கால் பதிக்கும் இந்தியர்கள்; 2027-இல் ககன்யான் திட்டம்: இஸ்ரோ தலைவர் உறுதி..!
ISRO chief confirms Indians will land on the moon by 2040
2040இல் இந்தியர்கள் நிலவில் தரையிறங்க செய்வதற்கு இஸ்ரோ உறுதி பூண்டுள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் நாராயணன் நிருபர்களிடம் கூறுகையில்,
வரும் 2040-ஆம் ஆண்டுக்குள் நிலவில் மனிதர்களை தரையிறக்கி, அவர்களை பத்திரமாக அழைத்து வருவதிலும், 2027இல் ககன்யான் திட்டத்திலும் இஸ்ரோ உறுதியாகவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். இதற்கான வழிகாட்டுதல்களை பிரதமர் கொடுத்துள்ளதாகவும், வெள்ளிக் கிரகத்தை ஆய்வு செய்வதற்கான திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன், வரும் 2035-ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு என சொந்தமான விண்வெளி நிலையம் அமைக்கப்படவுள்ளதாகவும், அதற்கான சாதனங்கள் 2027-ஆம் ஆண்டில் அனுப்பப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ககன்யான் திட்டத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இன்னும் நிறைய சோதனைகளை மேற்கொள்ள உள்ளத்தோடு, இதற்கு முன்னர் மூன்று ஆளில்லா விண்கலங்கள் அனுப்பப்பட உள்ளன வேண்டும் அறிவித்துள்ளார். மேலும், இந்தாண்டு டிசம்பரில் வாயுமித்ரா ஏவப்படவுள்ளதாகவும், அடுத்தாண்டு இன்னும் இரண்டு விண்கலங்கள் விண்ணில் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சீர்திருத்தத்துக்கான திட்டங்கள் தெளிவாக வகுக்கப்பட்டுள்ளதால், சுயசார்பு மற்றும் துடிப்பான விண்வெளி திட்டங்கள் என்ற நிலையை நோக்கி இஸ்ரோ தன்னம்பிக்கையுடன் முன்னேறுவதாகவும், சந்திரயான் 4, சந்திரயான் 5, செவ்வாய் கிரக ஆய்வு உள்ளிட்டவை இஸ்ரோவின் முக்கியமான திட்டங்கள் ஆகும் என்றும் இஸ்ரோ தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, சுயசார்பு என்ற நிலையில் இந்தியா உறுதியாகவுள்ளது என்றாலும், பருவநிலை அறவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் சர்வதேச ஒத்துழைப்புக்கு இஸ்ரோ தயாராகவுள்ளதாகவும் நாராயணன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகள் வரை விண்வெளித்துறையில் ஒன்று அல்லது இரண்டு ஸ்டார்ட் அப்கள் மட்டுமே இருந்தன. ஆனால், இன்று 300க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அபு்கள் உள்ளன. அவை செயற்கைக்கோள் தயாரிப்பு, ஏவும் பணி மற்றும் விண்வெளி சார்ந்த தகவல்களை ஆய்வு செய்கின்றன என்று கூறியுள்ளார்.

மேலும், விவசாயம், பேரிடர் மேலாண்மை, தொலைத்தொடர்பு, ரயில் மற்றும் வாகன கண்காணிப்பு மற்றும் மீன்வளம் ஆகியவற்றில் செயற்கைக்கோள் அடிப்படையிலான பயன்பாடுகளுக்கு அதிகரித்து வரும் இந்தியாவின் தேவையை இவை பூரத்தி செய்யும் என்றும் இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு கணிப்பொறி புரட்சியை யாரும் கற்பனை செய்யாத நிலையில், அடுத்த தலைமுறை விண்வெளி ஆய்வுகளை செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் ஆகியன வரையறுக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக சந்திரயான் 1 மூலம் நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்த நாம், சந்திரயான் 3 மூலம் நிலவின் தெற்கு பகுதியில் முதலில் ' Soft Landing' முறையில் தரையிறங்கினோம். விண்வெளித்துறையில் இந்தியா ஏராளமான சாதனைகளை படைத்துள்ளது என்றும், சர்வதேச அளவில் 09 துறைகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவித்துள்ளார்.
English Summary
ISRO chief confirms Indians will land on the moon by 2040