ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல் மட்டும் இத்தனை கோடியா..? கடந்த ஆண்டை விட அதிகமாம்..! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு ஜூன் மாதம் வசூலை விட இந்த வருடம் ஜூன் மாதம் ஜிஎஸ்டி மூலமான வசூல் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் வசூல் ஆன ரூ. 1,73,813  ஆகும். இந்த வருடன் ஜூன் மாதத்தின் வசூல் 1,84,597 லட்சம் கோடியாகும். அதன்படி, கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது கூடுதலாக 6.2 சதவீதம் வசூல் அதிகமாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.  

கடந்த ஜூன் மாதம் வசூலான ரூ.1,73,813 கோடியின் விபரம்:

மத்திய ஜிஎஸ்டி -34,558 கோடி ரூபாய்

மாநில ஜிஎஸ்டி - 43,268 கோடி ரூபாய்

ஐஜிஎஸ்டி - 93,280 கோடி ரூபாய்

செஸ்- 13,491 கோடி ரூபாய் அடங்கும்.

ஜூன் மாத வசூலில் உள்நாட்டு வர்த்தகம் மூலம் கிடைக்கும் வருமானம் 4.6 சதவீதம் உயர்ந்து ரூ.1.38 லட்சம் கோடியாகவும், இறக்குமதியில் இருந்து வந்த ஜிஎஸ்டி வசூல் 11.4 சதவீதம் உயர்ந்து ரூ.46,690 கோடியாகவும் உள்ளது.

கடந்த மே மாதம் வசூலான ரூ.2.01 லட்சம் கோடி, ஏப்ரல் மாதம் வசூலான ரூ.2.37 லட்சம் கோடியை விட ஜூன் மாத வசூல் குறைந்துள்ளது.

அதில் மாநில வாரியாக,

மஹாராஷ்டிராவில் - 30,553 கோடி ரூபாய்

கர்நாடகா - 13,409 கோடி ரூபாய்

குஜராத்- 11,040 கோடி ரூபாய்

தமிழகம் -10, 676 கோடி ரூபாய்

ஹரியானா - 9,959 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் ஆகியுள்ளது.

ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டு 08 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது ஜிஎஸ்டி வசூல் இரு மடங்காகி உள்ளதாக கூறப்படுகிறது. 2025 நிதியாண்டில் ரூ.22.08 லட்சம் கோடி வசூல் ஆகியமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is the GST collection for June alone worth this much


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->