திடீர் திருப்பம்: இந்தியா மீது போர் தொடுக்க தயாராகும் வங்கதேசம்?!
India vs Pakistan Bangladesh
இந்தியா பாகிஸ்தானை தாக்கினால், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை வங்கதேசம் கைப்பற்ற வேண்டும் என, வங்கதேச ராணுவத்தின் முன்னாள் உயர் அதிகாரி பரபரப்பான கருத்து தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா–பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலையாக மாறியுள்ளது.
இதற்கிடையே, வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுசுடன் நெருங்கிய தொடர்புடையவரும், ரைபிள்ஸ் படையின் முன்னாள் மேஜர் ஜெனரலுமான ஏ.எல்.எம். ஃபஸ்லுர் ரஹ்மான், பாகிஸ்தானுக்கான எதிர்ப்பு நடவடிக்கையாக இந்தியா தாக்குதல் நடத்தினால், அதற்கு பதிலடி கொடுக்க வங்கதேசம் இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்களை ஆக்கிரமிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நடவடிக்கைக்கு சீனாவின் ராணுவ உதவியை நாடி, இருநாடுகளும் கூட்டு ராணுவ அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற பரிந்துரையையும் அவர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார்.
ஏற்கனவே, இந்திய ஆதரவு குறித்த விவகாரத்தில் வங்கதேசத்தில் உள்ளாட்சி அரசியலும் பரபரப்பாகியுள்ளது.
English Summary
India vs Pakistan Bangladesh