அடுத்த மாதம் முதல்.. இந்தியா-இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து.! எங்குத் தெரியுமா? - Seithipunal
Seithipunal


நீண்டகாலமாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் இயக்குவது தொடர்பாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று கப்பல் இயக்கம் தொடர்பாக புதிய அறிவிப்பை இலங்கை விமான போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா வெளியிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, "அடுத்த மாதம் 29-ந் தேதி முதல், இந்தியாவில் உள்ள காரைக்கால் பகுதியிலிருந்து இலங்கை யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கும். 

இந்த கப்பலில் பயணம் ஒவ்வொரு பயணியும், சலுகைக் கட்டணத்தில் தலா 100 கிலோ வரை பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இந்த கப்பல் சேவையை இயக்குவதற்கு இரு நாட்டில் உள்ள பயணிகள் கப்பல் நிறுவனம் முன்வரலாம்' என்று தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே இந்த கப்பல் போக்குவரத்து வசதியாக, காங்கேசன்துறையில் ஒரு பயணிகள் கப்பல் தளத்தை இலங்கை கடற்படை கட்டி வருகிறது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்லும் இந்த கப்பல் பயணம், நான்கு மணி நேரம் கொண்டதாக இருக்கும் என்று இலங்கை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india to srilangan boat transport start at next month


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?
Seithipunal
-->