இந்தியா - பாக் போர் பதற்றம்.. நிதானத்தைக் கடைப்பிடிக்க ஜி 7 கூட்டமைப்பு வலியுறுத்தல்!
India Pakistan war tension G7 coalition urges to adhere to restraint
இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஜி 7 கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்திவருகிறது. இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் காஷ்மீரில் பொதுமக்கள் 16 பேர் பலியானார்கள்.
பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் இந்தியாவை நோக்கி வந்த ஏவுகணை மற்றும் டிரோன்களை இந்திய வான்பாதுகாப்பு அமைப்பு தகர்த்து எறிந்தது. இதனைத்தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஜி 7 கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஜி7 வெளியுறவு அமைச்சர்களும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதியுமான நாங்கள், கடந்த ஏப்ரல் 22ம் தேதியன்று பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறோம்.
மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இரு தரப்பிலும் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பில் நாங்கள் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம்.
உடனடியாக அமைதியான முடிவை நோக்கி நேரடி உரையாடலில் ஈடுபட இரு நாடுகளையும் ஊக்குவிக்கவும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். நாங்கள் நிகழ்வுகளை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம், விரைவான மற்றும் நீடித்த இராஜதந்திரத் தீர்மானத்திற்கு எங்கள் ஆதரவைத் தெரிவிக்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
India Pakistan war tension G7 coalition urges to adhere to restraint