அமெரிக்காவிற்கான ஐபோன் ஏற்றுமதியில் சீனாவை முந்திய இந்தியா..!
India overtakes China in iPhone exports to the US
அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக போர் நடந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவிற்கு அதிகம் ஐபோன்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னேறியுள்ளது.
இதன் காரணமாக சீனாவில் ஐபோன் உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்ற ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் அனைத்து ஐபோன்களையும் இந்தியாவில் தயாரிக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதற்கு, அந்நாட்டு அதிபர் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அதாவது, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஐபோன்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் ஆண்டுதோறும் 22 கோடி ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான புள்ளி விவரங்களின்படி, அமெரிக்காவிற்கு அதிக ஐபோன்களை ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளில் சீனாவை, இந்தியா முந்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முடிந்த கணக்கில் இந்தியாவில் இருந்து 30 லட்சம் ஐபோன்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட்டுள்ளதாகவும், சீனாவில் இருந்து 09 லட்சம் ஐபோன்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
English Summary
India overtakes China in iPhone exports to the US