உலகின் மிகப்பெரிய கட்டிடம்! அமெரிக்காவை அடித்து பின்னுக்கு தள்ளி நம் இந்தியா முதலிடம்! - Seithipunal
Seithipunal


உலகிலேயே மிகப்பெரிய அலுவல் கட்டடம் என்ற பெயர் பெற்ற அமெரிக்க ராணுவ அலுவலகமான பென்டகனையே இந்தியா மிஞ்சிவிட்டது. அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி, இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. உலகிலேயே மிகப்பெரிய அலுவல் வளாகம் என்ற பெருமையை இதுவரை பென்டகன் பெற்றிருந்த நிலையில், அதனை பின்னுக்குத் தள்ளிவிட்டு, சூரத்தில் அமைந்திருக்கும் குஜராத் வைர வணிக மைய கட்டடம் தற்போது முதலிடத்தை பிடித்துள்ளது.  

உலகில் உற்பத்தியாகும் மொத்த வைரத்தில், 90 சதவிகித வைரம் சூரத் நகரில்தான் செரிவூட்டப்படுகிறது.  35 ஏக்கர் நிலப்பரப்பில், 15 மாடிகளைக் கொண்ட அலுவல் கட்டடங்களைக் கொண்ட வளாகம் இங்கு நிறுவப்பட்டுள்ளது. இந்த வைர வணிக மையத்தின் கட்டமைப்பு கிட்டத்தட்ட 71 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டடம் அமைந்துள்ளது. இதனால்தான் இது முதலடத்தை பிடித்துள்ளது. 

4,700 அலுவலகங்கள் செயல்படும் வகையில் இந்த வளாகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தின் எந்த நுழைவாயிலில் இருந்தும் வெறும் 7 நிமிடங்களில், எந்த அலுவலகத்தையும் அடையும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் தனிச்சிறப்பு என்றே கூறலாம் சூரத் வைர வணிகச் சந்தையைப் பாராட்டியிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, இந்த வளாகத்தில் அமைந்துள்ள கட்டடங்களின் கட்டடக்கலை சூரத்தின் வைரத் தொழில் அடைந்திருக்கும் வளர்ச்சியை காட்டுகிறது என்றார்.

 மேலும், இது நாட்டில் உள்ள தொழில்முனைவோரின் ஆர்வத்துக்கு ஒரு சான்றாக அமைந்திருக்கிறது என்றார். இந்த வைர வணிக மைய வளாகம் நவம்பர் மாதத்திலிருந்து செயல்படத் தொடங்கும் என்றும், இந்த பிரதமர் மோடி இந்த வளாகத்தை திறந்து வைப்பார் என்றும் கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India GUJARAT SURAT LARGEST BUILDING America


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->