சட்டவிரோத அணுசக்தி நடவடிக்கைகள் மற்றும் அணு ஆயுத கடத்தலின் கூடாரம் பாகிஸ்தான்; இந்தியா குற்றச்சாட்டு..! - Seithipunal
Seithipunal


ரகசிய மற்றும் சட்டவிரோத அணுசக்தி நடவடிக்கைகள் , அணு ஆயுத கடத்தல், ஏற்றுமதி கட்டுப்பாட்டில் விதிமீறல், ரகசிய கூட்டணி, விஞ்ஞானி ஏகியூ கான் கூட்டாளிகள் உள்ளிட்டவற்றின் மையமாக பாகிஸ்தான் திகழ்ந்து வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஷ்வால் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட பல நாடுகள் தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை சோதனை செய்து வருகின்றன. இதனால், 'அமெரிக்காவும் தன்னிடம் உள்ள ஆயுதங்களை அமெரிக்கா சோதனை செய்ய வேண்டும் என அமெரிக்க போர்த்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்'என அந்நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளதாவது:

ரகசிய மற்றும் சட்டவிரோத அணுசக்தி நடவடிக்கைகள் பாகிஸ்தான் வரலாற்றில் ஒத்துப்போகின்றன. அந்நாடு அணுஆயுத கடத்தல், ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிமீறல், ரகசிய கூட்டணி, விஞ்ஞானி ஏகியூ கான் கூட்டாளிகள் உள்ளிட்டவற்றின் மையமாக பாகிஸ்தான் திகழ்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகளை எப்போதும் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு இந்தியா கொண்டு சென்றுள்ளது என்றும், பாகிஸ்தானின் அணுஆயுத சோதனை குறித்த டிரம்ப்பின் கருத்தை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம் என்றும் ரன்தீர் ஜெய்ஷ்வால் தெரிவித்துள்ளார்.

மேலும், உறுப்பு நாடுகளுக்கு இடையே முக்கிய விஷயங்கள் குறித்து பேசுவதற்கும், இந்தியா பசுபிக் பிராந்திய நலன் குறித்து விவாதிக்கவும் மதிப்புமிக்க தலமாக குவாட் அமைப்பை இந்தியா கருதுகிறது என்று தெரிவித்துள்ளார். குவாட் அமைப்பு தொடர்ந்து வளர்ச்சி பெறுகிறது என்றும், சமீபத்தில் மும்பையில் இந்திய கடலோர பாதுகாப்பு வாரம் நடந்தது. குவாட் துறைமுகம் தொடர்பான கருத்தரங்கமும் நடந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்திய வருகை தொடர்பாக டிரம்ப் தெரிவித்த கருத்துகள் கவனிக்கத்தக்கவை என்றும், இது குறித்து பகிர்வதற்கு எந்த தகவலும் இல்லை. இது குறித்து அறிந்ததும் உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India accuses Pakistan of being a haven for illegal nuclear activities and nuclear weapons smuggling


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->