ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ஏவுகணை, ட்ரான் தாக்குதல்! சுட்டு வீழ்த்திய இந்திய இராணுவம்!
IND vs PAK Jammu Kasmir drone attack
பஹல்காம் தற்கொலைப்படை தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா "ஆபரேஷன் சிந்தூர்" எனும் குறியீட்டுப் பெயரில் மே 7ம் தேதி நள்ளிரவில் பாகிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களைத் தாக்கியது. இந்த சிறப்புத் தாக்குதலில், லைன்ஒஃக் கண்ட்ரோல் (LoC) அருகே செயல்பட்டு வந்த 9 முக்கிய பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன.
இந்தியத் தாக்குதலுக்கு பதிலாக, பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டையும், இன்று அதிகாலை டிரோன் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி இந்திய எல்லையை நோக்கி தாக்குதலையும் நடத்தியுள்ளது. எனினும், இந்திய ராணுவம் தனது வான் பாதுகாப்பு அமைப்புகளின் மூலம் அனைத்து முறைகேடுகளையும் இடைமறித்து அழித்துள்ளது.
மேலும், இந்தியாவும் பாகிஸ்தானின் முக்கிய நகரங்களான லாகூர், ராவல்பிண்டி உள்ளிட்ட பகுதிகளை டிரோன் மூலம் தாக்கியுள்ளது. இதில், லாகூரில் அமைந்திருந்த வான் பாதுகாப்பு அமைப்புகள் செயலிழந்துள்ளன.
தற்போது, பாகிஸ்தான் ஜம்மு விமான நிலையத்தையும், அக்னூர், கிஸ்த்வார், சம்பா போன்ற பகுதிகளையும் குறிவைத்து தாக்கி வருகிறது. இவை அனைத்தும் இடமாற்றத்துக்காகக் கடும் பாதுகாப்பு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
பல நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பிளாக் அவுட் நிலை ஏற்பட்டுள்ளது. பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரம் உள்ளிட்ட பல இடங்களில் மக்கள் பீதி அடைந்து இருக்கின்றனர். LoC எல்லை முழுவதும் சூழ்நிலை பதற்றமாகவே காணப்படுகிறது.
English Summary
IND vs PAK Jammu Kasmir drone attack