வயலுக்கு பணிக்கு சென்ற பெற்றோர்கள்.. வீட்டில் தனியாக இருந்த சிறுமி.. திரும்பி வருகையில் ஒரே இரத்தம்.. அரங்கேறிய பெரும் சோகம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹமிர்பூர் மாவட்டத்தில் சிகாசி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 12 வயதுடைய சிறுமி தனது சகோதரர்கள் மற்றும் பெற்றோர்களுடன் வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமியின் பெற்றோர்கள் வயல் வேலைக்கு தங்களின் மகன்களை அழைத்து கொண்டு சென்றுள்ளனர். சிறுமி மட்டும் இல்லத்தில் தனியாக இருந்துள்ளார். 

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் வயலில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய நிலையில், சிறுமி இரத்த வெள்ளத்தில் அரைநிர்வாண நிலையில் பிணமாக இருந்துள்ளார். மேலும், சிறுமியின் உடலில் பல காயமும், தலை மற்றும் முகத்தில் காயமும், வாய் இரும்பால் தாக்கப்பட்டது போன்றும் இருந்துள்ளது. 

இதனால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான சிறுமியின் பெற்றோர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Uttarpredesh child sexual abuse and killed police investigation


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal