டாக்ரோஸ் கெமிக்கல் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து.. விடிய விடிய போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு துறை.!! - Seithipunal
Seithipunal


டாக்ரோஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய கெமிக்கல் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் செயற்கை பைரித்ராய்டுகள், இடைநிலை பூச்சிக்கொல்லி மற்றும் பூஞ்சை கொல்லிகள் போன்றவற்றை தயாரித்து வழங்குகிறது. 

இந்த நிறுவனத்திற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலத்தில் கிளைகள் உள்ள நிலையில், பல மாநிலத்தில் தொழிற்சாலையும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்நிறுவனத்தின் கெமிக்கல் ஆலை குஜராத் மாநிலத்தில் உள்ள பாருச் பகுதியில் செயல்பட்டு வருகிறது. 

இந்த ஆலையில் நேற்று எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்தானது ஏற்பட்டுள்ளது. இந்த தீயை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் நீண்ட நேரம் போராடிய நிலையில், இன்று காலை தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித காயம் இல்லை. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Tagros chemical Gujarat plant fire accident


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->