நிர்பயா வழக்கில், பவன் குமார் வழக்கறிஞருக்கு நெத்தியடி அடித்த டெல்லி நீதிமன்றம்.! கதறலில் பவன்.!! - Seithipunal
Seithipunal


கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் நிர்பயா என்ற இளம் பெண்ணை ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நிர்பயாவை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரு சிறுவன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றம் நடத்திய விசாரணையில் ஆறு பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அந்த சிறுவனை சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

மீதமிருந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங், டெல்லி திகார் சிறையிலையே தற்கொலை செய்து கொண்டான். மற்ற நான்கு குற்றவாளிகளும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை குறைக்க கோரி உச்சநீதிமன்றத்திலும் டெல்லி ஆளுநரிடத்திலும் முறையிட்டனர். ஆனால் அவர்களின் கருணை மனுக்களை ஆளுநர் நிராகரித்தார். 

இதையயடுத்து, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் நான்கு பேர் சார்பிலும் கருணை மனு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. நிர்பயா வழக்கில் குற்றவாளி வினய் சர்மாவை தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி கருணை மனுவை நிராகரித்து உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. நிர்பயா வழக்கு விசாரணையிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே விலகினார். இந்த வழக்கு வேறு ஒரு அமர்வில் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார்.

delhi, delhi court,

இந்நிலையில்., மரண தண்டனையை தள்ளுபடி அக்ஷய்குமார் குற்றவாளி தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறு ஆய்வு செய்த  எந்த முகாந்திரமும் இல்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பலாத்காரம் செய்து கொலை செய்த அக்ஷய்குமார் சிங்கிற்கு தூக்கு தண்டனை உறுதி செய்துள்ளது.

மேலும்., இது தொடர்பாக பவன் குமார் தொடர்ந்த வழக்கில்., சிறார் நீதிமன்றத்தின் கீழ் விசாரணையை மேற்கொள்ளுமாறு கூறியிருந்த நிலையில்., இது தொடர்பான மனுவை தள்ளுபடி செய்து அறிவித்தும்., இவருக்காக வழக்காடிய வழக்கறிஞர் ஏ.பி.சிங் குற்றம் நடைபெறும் போது சிறுவனாக இருந்தது தொடர்பாக வாதாடிய நிலையில்., வழக்கறிஞருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in nirbhaya case court cancel pawan kumar party lawyer speech and fine


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->