காதலியை கொடூர கொலை செய்து சூட்கேசில் அடைத்து கால்வாயில் வீசிய காதலன்.! விசாரணையில் கூறிய அதிர்ச்சி வாக்குமூலம்.!! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத் பகுதியை சார்ந்தவர் லாவண்யா (வயது 25). இவர் மென்பொருள் தொழில்நுட்பத்துறையில் பயின்று., கச்சிபவுலியில் இருக்கும் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கல்லூரியில் பயின்ற காலத்தில் இவருடன் சுனில்குமார் என்ற 25 வயதுடைய இளைஞர் பயின்று வந்துள்ளார். 

இவர் அங்குள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில்., லாவண்யா தனது காதலரிடம் தம்மை திருமணம் செய்து கொள்ளும் படி கூறியுள்ளார். இதற்கு பின்னர் கடந்த பிப்ரவரி மாதத்தில் தனது காதலை பெற்றோர்களிடம் லாவண்யா தெரிவித்ததை அடுத்து., சுனிலின் குடும்பம் குறித்து அறிந்து கொள்வதற்கு அவரின் பெற்றோரை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்த கூறி லாவண்யாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். 

இதனை கேட்டு அமைதியாக இருந்த சுனில் தனக்கு மஸ்கட்டியில் பணி கிடைத்துள்ளதாகவும்., தன்னுடன் லாவண்யாவை அனுப்பும் பட்சத்தில்., அவருக்கு அங்கேயே பணியில் சேருவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் வகையில்., நேர்காணல் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் லாவண்யா பங்கு பெற வேண்டிய அணைத்து ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நேர்காணல் நிறைவடைந்த பின்னர் 7 ம் தேதி மீண்டும் நாட்டிற்கு வந்துவிடுவார் என்று தெரிவித்துள்ளார். 

இதற்கு எந்த விதமான எதிர்ப்பும் தெரிவிக்காத லாவண்யாவின் பெற்றோர்கள்., அவர் காதலிப்பதை மட்டும் நம்பி அவரின் பெயர் சுனில் என்ற தகவலை மட்டும் தெரிந்து கொண்டு அவருடன் அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி கடந்த 4 ம் தேதியன்று மஸ்கட் செல்வதற்கு தயாராகி., ஐதராபாத் விமான நிலையத்திற்கு சென்று வழியனுப்பி வைத்துவிட்டு சென்றுள்ளனர்.  

விமான நிலையத்திற்கு சென்று சிறிது நேரத்தில் விமானம் இன்று தடைபட்டு விட்டதாகவும்., நாளை செல்லலாம் என்று கூறி அது வரை அருகில் இருக்கும் விடுதியில் தங்கியிருக்கலாம் என்று கூறியுள்ளார். இதனை ஏற்ற லாவண்யா அவருடன் விடுதிக்கு சென்ற பின்னர்., இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறை அடுத்து., லாவண்யாவை கொலை செய்து சூட்கேசில் வைத்து., இரவில் உடலை எடுத்து சென்று அங்குள்ள கால்வாயில் வீசியுள்ளார். 

கொலை செய்து விட்டு லாவண்யாவின் பெற்றோருக்கு அவரது அலைபேசியில் இருந்து கடந்த 7 ம் தேதியன்று லாவண்யா இந்தியா திரும்பியதை போல குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். லாவண்யா நீண்ட நாட்கள் ஆகியும் வீட்டிற்கு வராததை அடுத்து சந்தேகமடைந்த பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., சுனிலின் அலைபேசி எண்ணை வைத்து இருப்பிடம் அறிந்து அவரை கைது செய்த காவல் துறையினர்., மேற்கொண்ட விசாரணையில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

English Summary

in Hyderabad girl killed by her boy friend when telling about marriage


கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
Seithipunal