ஒமைக்ரான் எதிரொலி : நாடு முழுவதும் மக்கள் இதை செய்ய வேண்டாம் - மத்திய அரசு எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


மத்திய மக்கள் நல்வாழ்வு அமைச்சகத்தின் (ஐ.சி.எம்.ஆர்) இணைச் செயலாளர் லாவ் அகர்வால் சற்று முன்பு செய்தியாளர்களை சந்தித்த தெரிவித்ததாவது,

ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பாதிப்பு இதுவரை 90 நாடுகளுக்கு பரவி உள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை 11 மாநிலங்களில், 101 பேருக்கு இந்த ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 32 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் 22 பேர் ஒமைக்ரான் வகை கொரோனாவுக்கு பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

டெல்டா வகை கொரோனாவை விட ஒமைக்ரான் வகை கொரோனா அதிவேகத்தில் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 20 நாட்களாக நாட்டின் கொரோனா நோய்த்தொற்று பரவல் பத்தாயிரத்துக்கும் கீழாகவே பதிவாகி வருகிறது. நாட்டின் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 41 சதவீத பாதிப்பு கேரள மாநிலத்தில் தற்போது பதிவாகி வருகிறது. 

பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை கண்டிப்பாகத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். பொது இடங்களிலும், முக்கிய நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்." என்று மத்திய மக்கள் நல்வாழ்வு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICMR SAY ABOUT OMICRON


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->