மாநிலங்களவை இடத்திற்கு போட்டியிட மாட்டேன்...! அரசியல் விவகார கமிட்டி பார்த்துக் கொள்ளும்! - அரவிந்த் கெஜ்ரிவால்
I will not contest for Rajya Sabha seat Political Affairs Committee will take care of it Arvind Kejriwal
கடந்த 19ஆம் தேதி, குஜராத்தில் விஸ்வதார் மற்றும் காடி ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் விஸ்வதார் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றார்.இதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி வேட்பாளர் இட்டாலியா 17554 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் கீர்த்தி படேலை தோற்கடித்தார்.

மேலும், பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு தொகுதியில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.இந்த இடைத்தேர்தல் வெற்றி குறித்து ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருகிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்ததாவது,"குஜராத்தில் பாஜக- ஆம் ஆத்மி கட்சி இடையில்தான் நேரடி போட்டி. பாஜக வெற்றியை உறுதி செய்வதில் காங்கிரஸ் கைப்பாவையாக உள்ளது.
ஆம் ஆத்மி அரசு செய்த பணிகளுக்கான, லூதியானா மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் ஆம் ஆத்மிக்கு வாக்களித்துள்ளனர்.பாஜக உடன் காங்கிரஸ் நட்புறவை கொண்டுள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள் அக்கட்சியில் இருந்து வெளியேறி ஆம் ஆத்மி கட்சியில் இணைய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
ஆம் ஆத்மி மட்டுமே பாஜகவுக்கு எதிராக போரிட்டு வருகிறது.லூதியானா மேற்கு தொகுதியில் தற்போது எம்.பி.யாக இருக்கும் சஞ்சீச் ஆரோரா வெற்றி பெற்றுள்ளார். இதனால் மாநிலங்களை எம்.பி. தொகுதி காலியாகவுள்ளது. அந்த இடத்திற்கு போட்டியிடமாட்டேன். ஆம் ஆத்மி அரசியல் விவகார கமிட்டி இது தொடர்பாக முடிவு செய்யும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
I will not contest for Rajya Sabha seat Political Affairs Committee will take care of it Arvind Kejriwal