விஜயவாடாவில் 42 பெண்களுக்கு தீவிரதவாத பயிற்சியளித்த ஐதராபாத்தை சேர்ந்த பெண் தீவிரவாதி கைது..!
Hyderabad based female terrorist who provided terror training to 42 women arrested
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த சைதாபேகம் என்பவர் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பெண்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்து வந்த நிலையில், போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், சைதாபேகம் 'காவதீன்' என்ற பெயரில் ஒரு சிறப்பு வாட்ஸ்அப் குழு உருவாக்கி 42 இளம்பெண்களை சேர்த்து, தீவிரவாத பயிற்சி அளித்து வந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
அத்துடன், இன்ஸ்டாகிராமில் உள்ள 40 கணக்குகளில் வீடியோக்களை பதிவேற்றி பயிற்சியும் அளித்துள்ளார். அதன் பின்னர் அவர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்த பகீர் தகவல் வெளிவந்துள்ளது.
சைதாபேகம் வாட்ஸ்அப்பில் இருந்து, பயிற்சி மற்றும் ஆள்சேர்ப்பு தொடர்பான ஏராளமான பி.டி.எப். பைல்களை போலீசார் கைப்பற்றியுள்ள நிலையில், அவரை போலீசார் நேற்று விஜயவாடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
அதன் பின்னர் அவரை காவலில் எடுத்து, பயங்கரவாத கும்பலுடன் அவருக்குள்ள தொடர்பு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் பயங்கரவாத வலையமைப்பு குறித்த மேலும் பல விவரங்களை வெளியே வர வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் விஜயவாடா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Hyderabad based female terrorist who provided terror training to 42 women arrested