டி20 கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீராங்கனை; சாதனை படைத்த லாரா கார்டோசோ..!
The first female player to take nine wickets in a single T20 cricket inningsLara Cardoso sets a record
06 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் கிரிக்கெட் அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் பிரேசில் பெண்கள் மற்றும் லெசோதோ பெண்கள் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பிரேசில் அணி 20 ஓவரில் 08 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. அணியின் சார்பில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் மொன்னிகே 69 ரன்கள் அடித்தார்.
203 என்ற வெற்றி இலக்கை நோக்கி லெசோதோ அணி களமிறங்கியது. ஆனால், தொடக்கம் முதலே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவ்வணியின் தொடக்க வீரர்களை 01 மற்றும் 3 ரன்னில் லாரா கார்டோசோ வெளியேற்றி அசத்தினார். அடுத்து களமிறங்கிய 07 வீரர்களையும் 0 ரன்னில் வெளியேற்றிய லாரா, அதில் 3 பேரின் ஸ்டம்புகளையும் தகர்த்தெறிந்து சாதனை படைத்துள்ளார்.
அசாத்தியமாக பந்து வீசிய லாரா கார்டோசோ 03 ஓவரில் 02 மெய்டன் மற்றும் 04 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 09 விக்கெட்டுகளை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளார்.
சர்வதேச ஆண்கள் அல்லது பெண்கள் டி20 கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற வரலாற்றுசாதனையை லாரா கார்டோசோ படைத்துள்ளார்.
English Summary
The first female player to take nine wickets in a single T20 cricket inningsLara Cardoso sets a record