சமாதானம் பேச வந்த இடத்தில் முற்றிய தகராறு: மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்..! - Seithipunal
Seithipunal


பிரிந்து வாழ்ந்த மனைவியுடன் சமாதானம் பேசுவதற்காக சென்று, அவரது கழுத்தை அறுத்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் அம்ஜத். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். 

மனைவியுடன் சமாதானம் பேசுவதற்காக, அவர் 175 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாலசோர் நகருக்கு சென்றுள்ளார். அங்கு மனைவியைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் அம்ஜத் ஆத்திரமடைந்துள்ளார்.

அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பொதுமக்கள் முன்னிலையிலேயே மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயன்றுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள், உடனடியாக அம்ஜத்தைப் மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அப்பெண், முதலில் பாலசோர் மாவட்டத் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக கட்டாக்கில் உள்ள எஸ்.சி.பி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தற்போது அவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறதாககூறப்படுகிபிறது. இந்த கொடூரத் தாக்குதல் குறித்த காணொளி சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. இதுகுறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Husband slits wifes throat over heated dispute at peace talks in Odisha


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->