கொழுந்தியா மீது காதல் கொண்ட கணவர்! வினோத போராட்டம்! குழப்பத்தில் காவலர்கள்! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசத்தில் கடந்த 2021-ம் ஆண்டு, கன்னோஜ் பகுதியைச் சேர்ந்த ராஜ் சக்சேனாக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக அந்த பெண் அடுத்த ஆண்டே இறந்துவிட்டதால், மனைவியின் சகோதரியை ராஜ் சக்சேனா திருமணம் செய்து கொண்டார்.

அந்த பெண்ணுடன் 2 ஆண்டுகளாக ராஜ் சக்சேனா குடும்பம் நடத்தி வந்தார்.இந்த சூழ்நிலையில்,தனது மனைவியின் மற்றொரு தங்கை மீது அவருக்கு தற்போது காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதல் விவகாரம் குறித்து தனது மனைவியிடமே ராஜ் சக்சேனா வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

அதன் உச்சமாக தனது கொழுந்தியாளை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் அவர் கட்டளையிட்டுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியான அவரின் மனைவி, அவரை கடுமையாக திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலும், ராஜ் சக்சேனா தனது கொழுந்தியாள் மீது கொண்ட காதலில் உறுதியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் அடுத்தகட்ட உச்சமாக, மின்சார கோபுரத்தின் மீது ஏறி, ‘எனது கொழுந்தியாளை காதலிக்கிறேன். அவரை எனக்கு திருமணம் செய்து வையுங்கள்’ என்று கத்தி கூச்சலிட்டு போராட்டம் நடத்தியுள்ளார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் ராஜ் சக்சேனாவை சமாதானம் செய்ய முயன்றனர்.ல்

ஆனால்,சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக சமாதான பேச்சுவார்த்தை நீடித்து இறுதியாக அவரது மனைவியின் தங்கையை அவருக்கு திருமணம் செய்து வைப்பதாக உறுதி அளிக்கப்பட்ட பிறகே, ராஜ் சக்சேனா கீழே இறங்கி வந்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Husband love with Kolundiya Bizarre struggle Police confusion


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->