பீகாரில் கொடூரம்! பெட்ரோல் ஊற்றி மனைவியை எரித்த கொடூர கணவன்...! நடந்தது என்ன...? - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தைச் சேர்ந்த விகாஸ் குமார், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சுனிதா தேவி (25) என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்துக்குப் பிறகே சுனிதாவுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் தெரியவந்தது .விகாஸ் குமாருக்கு ஏற்கனவே ஒரு மனைவி இருப்பதுடன், அவருடன் விவாகரத்து கூட செய்யாமல் தன்னுடன் இரண்டாவது திருமணம் செய்திருந்தார்.

இதை அறிந்த சுனிதா பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தாலும், குடும்பத்தினரின் சமாதான பேச்சால் விகாஸுடன் வாழ்ந்தார். இதன்போது இருவருக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தன. ஆனால் அதிர்ஷ்டம் வராமல், இரு குழந்தைகளும் தொடர்ச்சியாக உயிரிழந்தன.இந்த துயரம் தணியுமுன்னே, விகாஸ் குமார் மற்றொரு பெண்ணை காதலிப்பதாகவும், அவளை திருமணம் செய்வதாகவும் சுனிதாவிடம் வெளிப்படையாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட கடும் தகராறில் சுனிதா பெற்றோர் வீட்டுக்கு திரும்பி சென்றார்.சமீபத்தில் நடந்த துர்கா பூஜை திருநாளை முன்னிட்டு, விகாஸ் குமார் மீண்டும் சுனிதாவை சமாதானப்படுத்தச் சென்றார். ஆனால், அங்கு ஏற்பட்ட வாக்குவாதம் கொடூரமாக மாறியது. கோபத்தின் உச்சியில், விகாஸ் குமார் பெட்ரோலை ஊற்றி சுனிதாவை தீவைத்து கொலை செய்தார் என போலீஸ் தெரிவித்துள்ளது.

பின்னர், தீயில் கருகிய சுனிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. சம்பவத்தை அடுத்து, விகாஸின் மிருகத்தனமான செயல் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Horror Bihar cruel husband poured petrol and set his wife fire What happened


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->