அதிரடி நடவடிக்கை! அவசரகால அதிகாரங்களை பயன்படுத்துமாறு உள்துறை அமைச்சகம் கடிதம்...!
Home Ministry sends letter to use emergency powers
காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு, இந்தியா அதிரடியாக பதிலடி கொடுத்து வருகிறது.இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம்,அத்து மீறி இந்திய எல்லையில் தாக்குதல் செய்தும், வான்வழி டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கு இந்தியாவும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர் பதற்றம் எல்லையில் நிலவுகிறது.
இந்தப் போர் பதற்றம் நிலவும் சூழலில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொளுமாறு உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது.
அதில், சிவில் பாதுகாப்பு விதிகளின் கீழ் அவசரகால அதிகாரங்களை பயன்படுத்துமாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Home Ministry sends letter to use emergency powers