பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை.!  - Seithipunal
Seithipunal


பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவர்களுக்குள் சாதி-மதம், ஏழை-பணக்காரன் என்ற வித்தியாசம் தெரியாத தெரியக்கூடாது என்பதற்காக சீருடை கொண்டுவரப்பட்டது. ஆனால், பெண்ணுரிமை பேசியவர்களும், சாதி, மதம் பள்ளி-கல்லூரிகளில் வரக்கூடாது என்றவர்களும் இப்போது மாற்றி பேசி வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிந்து வருவதற்கு அனுமதி இல்லை என, அம்மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஸ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அந்த பேட்டியில், "ஹிஜாப் அணிந்து வருவதற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. உச்சநீதிமன்றமும் ஹிஜாப் விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்கவில்லை.

தற்போது பள்ளிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. ஒரு சில பள்ளிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதால், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

எனவே, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிந்து வருவதற்கு அனுமதி இல்லை. ஹிஜாப் அணிந்து வந்தால், அந்த மாணவிகள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். சட்டத்திற்கு மதிப்பளிக்க வேணடும்.

ஹிஜாப்புக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசி வருகிறார். ஹிஜாப்பை வைத்து அரசியல் செய்கிறார்கள். காங்கிரஸ் கட்சியினர் ஓட்டு வங்கி அரசியலுக்காக ஹிஜாப்பை ஆதரித்து பேசி வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hijab isssue may 2022


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->