பிற்படுத்தப்பட்டோர் நல ஆணைய நிர்வாகிகள் பதவி நியமனம் - மத்திய அரசுக்கு அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் பதவிகள் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதியுடன் காலாவதியாகி விட்டது. 

இதனால், ஆணையத்துக்கு தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் சமூக நீதி பேரவை தலைவர் கே.பாலு, சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, ஆணையத்திற்கு கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், 2023 மார்ச் மாதம் ஒரு உறுப்பினர் நியமிக்கப்பட்டதாகவும் மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கடந்த ஓராண்டாக ஆணையம் செயல்படவில்லை என்றும், ஆணையத்துக்கு துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களை விரைந்து நியமிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த விசாரணையை 2024 ஜனவரி மாதம் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

high court order to central govt for appoint officers in Backward Welfare Commission


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->