அடுத்த சிக்கலில் காங்கிரஸ் - வங்கி கணக்கு முடக்கத்திற்கு எதிரான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி.! - Seithipunal
Seithipunal


கடந்த 2018-19ம் ஆண்டுக்கான வருமான வரியைத் திரும்பச் செலுத்துவதில் 45 நாட்கள் காலதாமதம் ஏற்பட்டதால் இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் இந்திய இளைஞர் காங்கிரஸ் ஆகியவற்றின் வங்கிக் கணக்குகள் வருமான வரித் துறையால் முடக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.210 கோடி அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டிருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுகியதை அடுத்து, வங்கிக் கணக்குகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், வங்கிக் கணக்குகளில் உள்ள 115 கோடி ரூபாய் இருப்பை உறுதி செய்யவும் நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தீர்ப்பாயத்தில் கடந்த மாதம் விசாரணை நடத்தப்பட்டபோது காங்கிரஸ் வங்கிக் கணக்குகளில் இருந்து 65 கோடி ரூபாயை வருமான வரித்துறை எடுத்திருப்பதாக தகவல் வெளியானது.

சமீபத்தில், 100 கோடி ரூபாய்க்கு மேல் நிலுவையில் உள்ள வரியை வசூலிப்பதற்காக காங்கிரசுக்கு வருமான வரித்துறை வழங்கிய நோட்டீசை வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தடை செய்ய மறுத்த உத்தரவில் தலையிட உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து காங்கிரஸ் வங்கி கணக்கு முடக்கத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. ஆனால் இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

high court Dismissal of appeal against bank account freezing case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->