பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மருத்துவமனையில் அனுமதி! 
                                    
                                    
                                   Gun Fire Actor Govinda Mumbai hospital 
 
                                 
                               
                                
                                      
                                            பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகரும், சிவசேனா கட்சியின் நிர்வாகியுமான கோவிந்தாவின் காலில் துப்பாக்கி கொண்டு பாய்ந்து மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து வெளியான முதல்கட்ட தகவலின்படி, தான் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியை நடிகர் கோவிந்தா சுத்தம் செய்து கொண்டிருந்து உள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக ட்ரிகரில் கைப்பட்டு துப்பாக்கி வெடித்துள்ளது.
இதில், நடிகர் கோவிந்தாவின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உள்ளது. உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் காலில் பாய்ந்த குண்டு அகற்றப்பட்டுள்ளது. 
மேலும் தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், இருப்பினும் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரின் மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
                                     
                                 
                   
                       English Summary
                       Gun Fire Actor Govinda Mumbai hospital