கடந்த மே மாதத்தில் ரூபா 02 லட்சம் கோடியை தாண்டியுள்ளது ஜிஎஸ்டி வசூல்..!
GST collection crossed Rs 2 lakh crore in May
கடந்த மே மாதத்தில் மட்டும் ஜிஎஸ்டி மூலம் ரூ.2.01 லட்சம் கோடி வசூலாகியுள்ளதாகமத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு மே மாதத்தின் வசூல் தொகையை விட 16.4 சதவீதம் அதிகம் என்று குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் அறிக்கை வெளியிட்டுகூறியுள்ளதாவது: கடந்த மே மாதத்தில்.
மத்திய ஜிஎஸ்டி - ரூ.35,434 கோடி
மாநில ஜிஎஸ்டி- ரூ.43,902 கோடி
ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி - ரூ.1.09 லட்சம் கோடி
செஸ் வரி- ரூ.12,879 கோடி என மொத்தம் ரூ.2.01 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது.

அத்துடன், மே மாதத்தில், உள்நாட்டு பரிமாற்றம் மூலம் கிடைக்கும் வருமானம் 13.7 சதவீதம் அதிகரித்து ரூ.1.50 லட்சம் கோடியும், இறக்குமதி மூலம் கிடைக்கும் ஜிஎஸ்டி வருமானம் 25.2 சதவீதம் அதிகரித்து, ரூ.51,266 கோடியும் வசூலாகியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஆண்டு (2024) மே மாதம் ஜிஎஸ்டி மூலம் 1,72,739 கோடி ரூபாய் வசூல் ஆகி இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி மூலம் ரூ.2.37 லட்சம் கோடி வசூலாகியிருந்தது. தற்போது தொடர்ச்சியாக இரண்டாவதாக மே மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடியை தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
GST collection crossed Rs 2 lakh crore in May