திருப்பதியில் தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!  - Seithipunal
Seithipunal


திருப்பதியில் இருக்கும் சிஎம் ஆர் ஷாப்பிங் மாலில் தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்களுக்கு ரேஷனில் இலவசமாக வழங்கும் வேட்டி சேலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிஎம்ஆர் நிறுவனத்தின் ஷாப்பிங் மால்கள் இருக்கின்றது. அங்கே ஏராளமான ஆடைகள் மற்றும் தங்கம், வெள்ளி ஆபரணங்கள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் திருப்பதியில் இருக்கும் சிஎம் ஆர் ஷாப்பிங் மாலில் தமிழக அரசு இலவசமாக பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்களுக்கு கொடுக்கும் சேலைகள் 196 ரூபாய்க்கு மட்டுமே என்று எழுதப்பட்டு இருந்துள்ளது. அதிலும் 50 சதவீத தள்ளுபடியில் வழங்கி 98 ரூபாய்க்கு விற்பனை செய்ய இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த பகுதியின் கடைகளில் விசாரித்த பொழுது இந்தப் புடவைகள் சில்லறை மற்றும் மொத்த துணி விற்பனை கடைகளில் கடந்த சில நாட்களாகவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது தெரியவந்துள்ளது. இது தமிழக மக்களுக்கு அதிர்ச்சி மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government saree and dhoti sold in thirupathi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->