'அமெரிக்காவின் போர்நிறுத்த வாக்குறுதிகளைத் தாங்கள் நம்பத் தயாராக இல்லை'; ஈரான் ராணுவம்...! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் போர்நிறுத்த வாக்குறுதிகளைத் தாங்கள் நம்பத் தயாராக இல்லை என்று  ஈரான் ராணுவம் விடுத்துள்ள அறிக்கை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இனி வரும் காலங்களில் ஈரான் மீது நடத்தப்படும் எந்தவொரு சிறிய அத்துமீறலுக்கும், முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு மிகக் கடுமையான மற்றும் வீரியமான தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் இந்த அறிவிப்பு ஏற்கனவே, மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

அத்துடன், ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைகளைப் பேசிக்கொண்டு, மறுபுறம் தனது நட்பு நாடுகளுக்கு ராணுவ உதவிகளை வழங்குவதையும், பொருளாதாரத் தடைகளை விதிப்பதையும் அமெரிக்கா மேற்கொள்ளுவதை தனது அதிருப்திக்கு காரணமாக ஈரான் தெரிவித்துள்ளது.

போர் நடவடிக்கை காரணமாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை தனது நட்பு நாடுகளை தவிர்த்து மற்ற நாடுகளுக்கு முடக்கியுள்ளது. 
இதனால் சர்வதேச அளவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பின்னணியில் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால் அந்த நாட்டின் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த சூழலில் நேற்று அமெரிக்கா – ஈரான் இடையே 02 வாரத்திற்கு சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த போர்நிறுத்தத்தை ஈரான் ஏற்றுக்கொண்டாலும், அது ஒரு 'தங்கள் மீது மீண்டும் ஏதேனும் அத்துமீறல்கள் நடந்தால், முன்னெப்போதையும் விட வீரியமான பதிலடி கொடுக்கப்படும்.'என ஈரான் ராணுவம் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் இந்த சமாதான முயற்சியைத் தாங்கள் முழுமையாக நம்பவில்லை என்றும் ஈரான் ராணுவம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Iranian military declares that it is not prepared to trust America ceasefire promises


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




சினிமா

Seithipunal
--> -->