முக்கிய உதவி செய்த கூகுள்.. உணவு, தங்குமிடம் தெரிந்துகொள்ளும் வசதி.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நாடுதழுவிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் மக்கள் பெரும் பரிதவிப்பிற்கு உள்ளாகியுள்ள நிலையில், அத்தியாவசிய தேவைக்கு பயன்படும் பொருட்கள் விற்பனை செய்யும் இடங்கள் குறித்த தகவல் பெரும்பாலும் வெளிப்படையாக தெரிவதில்லை. இன்றைய காலகட்டத்தில் நாம் அதிகளவு இணையத்தை உபயோகம் செய்யும் நிலையில், இணையத்தின் மூலமாக இதனை அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

இதன் அடிப்படையில், கூகுள் நிறுவனம் முதலில் ஆய்வு மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வின்படி, இந்தியாவில் சுமார் 30 நகரத்திற்கான சேவை துவங்கப்பட்டுள்ளது. இந்த சேவை ஆங்கிலத்தில் வழங்கப்பட்டு வரும் நிலையில், வரும் நாட்களில் மாநில மொழிகளில் வழங்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

இதனைப்போன்று, இன்னும் வரும் காலத்தில் மாநில மொழிகளில் சேவையை வழங்குவது மட்டுமல்லாது, இந்தியாவுடைய பல பகுதிகளும் தொடர்ந்து விரிவுபடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவையும் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிவாரண முகாம்களை கண்டறியவும், மத்திய மாநில அரசுடன் இணைந்து கூகுள் நிறுவனம் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Google introduce maps to visit govt corona shelters


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
Seithipunal