முறைகேடாக சொத்து சேர்த்த வழக்கு: ஒடிசா வனத்துறை அதிகாரி வீட்டில் அதிரடி சோதனை: தங்கக்காசுகள் மற்றும் ரூ.1.5 கோடி பணம் பறிமுதல்..! - Seithipunal
Seithipunal


ஒடிசாவில் ஜஜ்புர் மாவட்டத்தில் வனத்துறை துணை ரேஞ்சராக இருக்கும் ராம சந்திர நேபாக் என்பவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாக அவருக்கு சொந்தமான 06 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். 

பல குழுவினர் இணைந்து நடத்திய இந்த சோதனையில், அடுக்குமாடி கட்டடம் ஒன்றில், தங்கக்காசுகள் மற்றும் ரூ.1.5 கோடி ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1.5 கோடி ரூபாய் எண்ணப்பட்ட நிலையில், இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பணம் எண்ணும் பணி நடந்து வருகிறது.

மேலும், 04 கிலோ தங்க பிஸ்கட்கள் மற்றும் தலா 10 கிராம் கொண்ட 16 தங்கக்காசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், அவருக்கு சொந்தமான பூர்விக வீடுகள் மற்றும் உறவினர் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது. 

கடந்த ஒரு வாரத்தில் வனத்துறையில் அதிக சொத்து சேர்த்ததாக நடக்கும் இரண்டாவது சோதனை இதுவாகும். இதற்கு முன் கேயின்ஜர் பகுதியில் டிவிஷனல் அதிகாரி நித்யானந்தா நாயக் என்பவரருக்கு சொந்தமான வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு அவரது பெயரில் 115 இடங்கள் , 200 கிராம் தங்கக்காசுகள், ரைபிள்கள், கோடிக்கணக்கான சொத்து ஆவணங்கள், ரூ.1.55 லட்சம் ரொக்கம், தேக்கு மரப் பொருட்கள், வாகனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gold Coins and Several Crores in Cash Seized in Raid at Odisha Forest Officers House


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->