காஷ்மீர் விவகாரத்தில் தலையிடும் ஜெர்மனி! மூன்றாம் தரப்பு தலையீடு தேவையில்லை என இந்தியா கண்டனம்! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானின் தூண்டுதல் காரணமாக காஷ்மீர் விவகாரத்தில் ஜெர்மனி கருத்து தெரிவிக்கிறது!

ஜெர்மனி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கடந்த ஏழாம் தேதி பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் பிலவல் புட்டோ ஜர்தாரி சென்றார். அப்போது அவரும் ஜெர்மனி வெளியூர் துறை அமைச்சர் அன்னலினா பர்பாக்கும் செய்தியாக சந்திப்பை நடத்தினர். அப்போது பேசிய பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் "காஷ்மீரில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடைபெற்று வருவது கவலை அடைக்க அளிக்கிறது. இது உலக அமைதிக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. சர்வதேச சட்டத்தின் படியும் ஐநா தீர்மானத்தின்படியும் காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காணாத வரை தெற்காசியா நாடுகளில் அமைதி நிலவ வாய்ப்பு இல்லை" என கூறினார்.

இதை தொடர்ந்து பேசிய ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் "ஐநா காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டும். இந்த விவகாரத்தில் ஐநா தலையீடு இருந்தால் அதற்கு ஜெர்மனி ஆதரவளிக்கும். சம்பந்தப்பட்ட இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்றார்.

இதற்கு இந்திய தரப்பிலிருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளிய துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி "காஷ்மீர் விவகாரம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள இரு தரப்பு பிரச்சனை. இதில் மூன்றாம் தரப்பு தலையிடுவதற்கு எந்தவித பங்கும் இல்லை மாறாக நீண்ட காலம் காஷ்மீரை குறி வைக்கும் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்" என பதிலடி தந்தார்.

உக்ரைன் விகாரத்தில் மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாட்டுக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலை வகித்து வருகிறது. இதன் காரணமாக இந்தியா மீது ஜெர்மனிக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என நம்பப்படுகிறது. மேலும் சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் தலையீடு அதிகரித்து வருவது ஜெர்மனிக்கு பொறாமையை ஏற்படுத்தி உள்ளது. 

கடந்த மாதம் நடைபெற்ற ஐநா சபை பொதுக்கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் விரிவுபடுத்தப்பட்ட ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, ஜப்பான், பிரேசில் நாடுகளை சேர்க்க ஆதரவு தெரிவித்தார். நேட்டோ அமைப்பில் சக்தி வாய்ந்த உறுப்பினரான ஜெர்மனிக்கு பைடன் ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Germany to intervene in the Kashmir issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->