4 மாநில இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்.. வெற்றி கனி யாருக்கு..? முழு விவரம் இதோ..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை போன்று அருணாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, மேற்குவங்க ஆகிய மாநிலங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன்படி அருணாச்சல பிரதேசம் லும்லா தொகுதிக்கான இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் மையல்போர்ன் ஷைம் தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

அதே போன்று ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கிராத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி சார்பாக பஜ்ரங் மாடோ விட பாஜக கூட்டணி வேட்பாளராக ஏ.ஜே.எஸ்.யூ கட்சியின் வேட்பாளர் சுனிதா சௌரி 21,776 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

அதே போன்று மகாராஷ்டிரா மாநிலம் சின்சிவாட் தொகுதியில் பாஜக வேட்பாளர் அஸ்வின் லக்ஷ்மன் காங்கிரஸ் வேட்பாளர் வித்தால் அலியாஸ் விட 8,554 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

மேலும் மகாராஷ்டிரா மாநிலம் கஸ்பா பெத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தனஜேகர் பாஜக வேட்பாளரை விட 10,950 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் சகார்டிகி தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பய்ரோன் பிஸ்வாஸ் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரை விட 22,326 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். இந்த தொகுதியில் பாஜக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அதிமுக வேட்பாளரை விட 29,165 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். நடைபெற்ற முடிந்த 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Four state by election leading situation


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->