வெங்காயத்தின் ஏற்றுமதி வரி 40 சதவீதம் ஆக விதிப்பு.!! - Seithipunal
Seithipunal


வெங்காயத்தின் ஏற்றுமதி வரி 40 சதவீதம் ஆக விதிப்பு.!!

மத்திய அரசு வெங்காயத்தின் மீதான ஏற்றுமதி வரியை 40 சதவீதம் ஆக விதித்து உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும், கடந்த சில வாரங்களாகவே வெங்காயத்தின் விலை அதிகரித்து வந்தது. 

இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். இந்த நிலையில், வருகிற செப்டம்பர் மாதம் வெங்காயத்தின் விலை மேலும் உயர்வதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில், மத்திய அரசு உள்நாட்டில் வெங்காய விநியோகத்தை மேம்படுத்துவதற்காகவும் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. 

மேலும், இந்த வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெங்காயம் மீதான இந்த ஏற்றுமதி வரி விதிப்பு வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

forty percentege export tax of onion central government announce


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->