லிப்டில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - உணவு விநியோக வாலிபர் கைது - Seithipunal
Seithipunal


பெங்களூருவில் லிப்டில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உணவு விநியோக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள தலகட்டபுரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் நபர் ஒருவர் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்தார். இதையடுத்து ஆர்டர் செய்யப்பட்ட உணவை டெலிவரி செய்வதற்காக 30 வயது சேத்தன் என்ற உணவு டெலிவரி வாலிபர் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்துள்ளார். அப்பொழுது தரை தளத்திலிருந்து லிப்ட் மூலம் சேத்தன் சென்றுள்ளார். அப்பொழுது லிப்ட்டில் அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 10 வயது சிறுமியும் சென்றுள்ளார்.

இந்நிலையில் சேத்தன், லிப்டில் வைத்து 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று சிறுமிக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இருப்பினும் சிறுமி இது குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக குடியிருப்பு காவலாளிக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, காவலாளி சிலருடன் சேர்ந்து சேத்தனை மடக்கி பிடித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் லிப்டில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சேர்த்தனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

food delivery youth arrested for sexually harassing 10 year old girl in lift in Bangalore


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->