4-வது நாளாக நீடிக்கும் விமான ரத்து..! விமான நிலையங்களில் 'இண்டிகோ' மீது கோபமடைந்த பயணிகள் ‘கொந்தளிப்பு’...!
Flight cancellations continue 4th day Angry passengers IndiGo cause chaos at airports
நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, மூன்றாவது நாளாகவும் சேவை தடம்புரண்ட நிலையில் இருந்தது. மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பல முக்கிய விமான நிலையங்களில் 550-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இதில் டெல்லியில் மட்டும் 172 விமானங்கள், மும்பையில் 118, பெங்களூருவில் 100, ஐதராபாத் 75, கொல்கத்தா 35, சென்னையில் 26 விமானங்கள் ரத்தானது.பணியாளர் பற்றாக்குறை மற்றும் அட்டவணை கோளாறுகள் காரணமாக ஏற்பட்ட இந்த தடங்கல், பயணிகளை மிகவும் பாதித்தது.

நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள், கவுன்டர்களில் பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விமான நிலையங்களில் பரபரப்பை உருவாக்கினர்.இச்சம்பவத்துக்கு பின்னர், DGCA, விமான ரத்தாக்கத்தை குறைக்கும் வகையில் விரைவான நடவடிக்கை திட்டத்தை சமர்ப்பிக்குமாறு இண்டிகோவுக்கு அறிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்திய விமானிகள் கூட்டமைப்பு, இண்டிகோவின் கோளாறுக்கு விமானிகள் காரணமல்ல எனத் தெளிவுபடுத்தியது. மற்ற நிறுவனங்கள் முன்னோக்கியத் திட்டமிடலால் பாதிக்கப்படாமல் செயல்பட்டுள்ளன; ஆனால் இண்டிகோ மட்டும் போதிய அளவில் பணியாளர்களை நியமிக்காததால் சேவை முடங்கி விட்டதாக கடுமையாகக் குறிப்பிட்டது.
இந்நிலையில், சேவை தடங்கல் 4-வது நாளாக நீடிக்கும்போது, இண்டிகோ நிறுவனம், தங்களது பயணிகளை சென்னை விமான நிலையத்திற்குள் அனுமதிக்க வேண்டாம் என CISF-க்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Flight cancellations continue 4th day Angry passengers IndiGo cause chaos at airports