கர்நாடகாவில் அதிர்ச்சி; தந்தையின் பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான மகள்; போக்சோவில் தூக்கிய போலீசார்..!
Father sexually assaults daughter gets her pregnant Police arrest her under POCSO Act
16 வயது மகளை, தந்தை பாலியல் வன்கொடுமை செய்து, கர்ப்பமாக்கிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தை சேர்ந்த சிறுமிக்கு கால்களில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் தனது தாயிடம் கூறியுள்ளார். இதையடுத்து மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துள்ளனர். அப்போது அந்த சிறுமி 31 வாரம் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
அப்போதுதான் தனது கர்ப்பத்திற்கு காரணம் யார் என்று அந்த சிறுமி தாயிடம் கூறியுள்ளார். அதாவது, கடந்த ஓராண்டு காலமாக தனது தந்தை தன்னை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகவும், இதைப் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டி வந்ததாகவும் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், உடனடியாக இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் போலீசார், சிறுமியின் தந்தை மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறித்த சிறுமிக்கு 20 வயதில் ஒரு அக்காவும், 10 வயதில் ஒரு தம்பியும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Father sexually assaults daughter gets her pregnant Police arrest her under POCSO Act