ஆம்புலன்ஸ வசதி இல்லாமல் இறந்த மகளை பைக்கில் கொண்டு சென்ற தந்தை - வைரலாகும் வீடியோ.!! - Seithipunal
Seithipunal


ஆம்புலன்ஸ வசதி இல்லாமல் இறந்த மகளை பைக்கில் கொண்டு சென்ற தந்தை - வைரலாகும் வீடியோ.!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷஹ்டோல் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் லட்சுமண சிங் என்பவரின் பதின்மூன்று வயது மகள் ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில் அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். 

இதையடுத்து, லட்சுமண சிங் தனது மகள் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகத்திடம் ஆம்புலன்ஸ் கேட்டுள்ளார். அதற்கு மருத்துவமனை நிர்வாகம் லட்சுமணனிடம் உங்கள் கிராமம் 15 கி.மீ மேல் உள்ளதால் ஆம்புலன்ஸ் வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

மேலும், தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மகளின் உடலைக் கொண்டு செல்ல போதியளவு பணமில்லாததால், லட்சுமண சிங் உறவினர்களின் உதவியுடன் இருசக்கர வாகனத்தில் தனது மகளின் உடலை கொண்டு செல்ல முடிவு செய்து, அதன்படி லட்சுமண சிங் மகள் உடலை கொண்டு சென்ற போது அந்த வழியாக ஷஹ்டோல் மாவட்ட ஆட்சியர் வந்துள்ளார். 

அவர் இறந்த சிறுமியின் உடலை இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்வதைப் பார்த்து லட்சுமண சிங்கை நிறுத்தி விசாரித்துள்ளார். அப்போது அவரிடம் லட்சுமணசிங் மருத்துவமனையில் நடந்த விஷயத்தை கூறி அழுதுள்ளார்.

இதைக்கேட்ட அவர் சிறுமியின் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல வாகன ஏற்பாடு செய்து, லட்சுமணசிங்கிற்கு பண உதவியும் செய்துள்ளார். மேலும்,  ஷஹ்டோல் அரசு மருத்துவமனை குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார். 

இதற்கிடையே இறந்த மகளை ஆம்புலன்ஸ் வசதியின்றி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லும் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு அனைவரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father carried daughter body on bike without ambulance facility in madhya pradesh


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->