நாடு முழுவதும் பந்த் - தமிழகத்தில் பள்ளிக், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பா?
farmers bandh in india
தலைநகர் டெல்லியில் விவசாயிகள், விளைப் பொருட்களுக்கு ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின்சார சட்டத்திருத்த மசோதா ரத்து, விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் டெல்லிக்குள் விவசாயிகள் நுழையாமல் இருக்க, எல்லையில் தடுப்புகள் போடப்படும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி நுழைபவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்து வருகின்றனர். இந்த நிலையில், சம்யுக்தா கிஸான் மோர்ச்சா என்ற விவசாய அமைப்பினர் இன்று நாடு தழுவிய பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த பந்த்க்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி மற்றும் சில தமிழக விவசாய சங்கங்கள் ஆதரவு கொடுத்துள்ளது. இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும். இந்த பந்தில் விருப்பப்படும் வணிகர்கள் மட்டுமே பங்கேற்க இருப்பதால் வணிகத்திலும் பாதிப்பு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.