மார்ச் 1ம் தேதி முதல் திருப்பதி வரும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் - தேவஸ்தானம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிலர் இடைத்தரகர்கள் மூலம் தங்குவதற்கான அறைகள், லட்டு பிரசாதம் போன்றவற்றை வாங்கி செல்கின்றனர்.

இதனை தடுக்க திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் புது தொழில்நுட்பத்தை பயன்படுத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி இந்த தொழில்நுட்பம் மூலம் பிரசாதம் வழங்குவது, தங்கும் அறைகளை பெறுவது போன்றவற்றிற்காக கவுண்டர்களுக்கு செல்பவர்கள் அந்த வாரத்தில் எத்தனை முறை வந்து சென்றுள்ளனர் என்பதை தெரிந்து கொள்ளலாம். திருப்பதிக்கு வரும் பக்தர் ஒருவர் அதிகமான டோக்கன் வாங்குவதை தடுப்பதற்காக இந்த புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.

அதன்படி வரும் மார்ச் ஒன்றாம் தேதி முதல் திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு முக அடையாளம் காணும் தொழில்நுட்ப முறையானது அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Face scanning technology introduce in Thirupathi temple


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->