நாட்டை அதிரவைத்த வெடிப்பு: டெல்லி தாக்குதலுக்கு பொறுப்பு நாங்கள்தான்! - பாகிஸ்தான் காஷ்மீர் தலைவரின் சர்ச்சை பேச்சு! - Seithipunal
Seithipunal


டெல்லியில் 10ஆம் தேதி நடந்த கார் குண்டு வெடிப்பு பயங்கரவாத தாக்குதல் நாட்டையே அதிர வைத்தது. சம்பவ இடத்தில் 13 பேர் பலியான நிலையில், தொடர்ந்து சிகிச்சையில் இருந்த இருவர் உயிரிழப்புடன், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 15–ஆக உயர்ந்து, தலைநகர் திடுக்கிட்டு நிற்கிறது. 27 பேர் காயமடைந்து பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் போராடி வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையை மேற்கொண்ட டெல்லி போலீசார், வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு என்ஐஏ க்கு ஒப்படைத்ததைத் தொடர்ந்து, விசாரணை அதிவேகமாக நடைபெற்று வருகிறது. அதில், கார் குண்டு தாக்குதலை திட்டமிட்டு நடத்தியது, டெல்லி அருகே உள்ள பரிதாபாத் பல்கலைக்கழகத்தில் டாக்டராகப் பணியாற்றிய உமர் முகமது நபி என்பதும், இவருக்கு பயங்கரவாத நெட்வொர்க்குகளுடன் தொடர்பு இருந்ததும் புலனாய்வில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த தாக்குதலை முன்னின்று நடத்திய குழுவில் பலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பு ஜெய்ஷ்-இ-முகமது உடனான தொடர்பு இருப்பதாக பாதுகாப்பு முகமைகள் கூறுகின்றன.

சம்பவம் குறித்து சர்ச்சையை கிளப்பும் வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முன்னாள் ‘பிரதமர்’ சவுத்ரி அன்வாருல் ஹக் அதிர்ச்சியான பதில் அளித்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்து தனது பதவியை இழந்த அவர், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்,“பலோசிஸ்தானில் நீங்கள் ரத்தம் சிந்த வைக்கும்போது, செங்கோட்டையிலிருந்து காஷ்மீரின் வனப்பகுதி வரை எங்கள் தாக்குதல்கள் தொடரும். டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பும் எங்களின் திட்டமே.

இன்னும் உடல்கள் எண்ணி முடிக்கப்படவில்லை,” என்று கருத்து வெளியிட்டுள்ளார்.இந்த கருத்து, டெல்லி கார் குண்டுவெடிப்பில் பாகிஸ்தான் அமைப்புகளின் தொடர்பு இருப்பதாக ஏற்கனவே எழுந்த சந்தேகங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

ஆனால், அவரது இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பாகிஸ்தான் அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்காமல் மௌனம் சாதித்துள்ளது.இதேவேளை, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், “இந்தியாவுடன் முழுமையான போர் சாத்தியம் இல்லை என்று சொல்ல முடியாது. பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் முழு விழிப்புடன் உள்ளது” என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

explosion shook country responsible Delhi attack Controversial speech Pakistani Kashmiri leader


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->