சட்டவிரோத மதமாற்றம்: சங்கூர் பாபா மற்றும் கூட்டாளி நஸ்ரின் கைது: விசாரணையை தொடங்கியுள்ள அமலாக்கத்துறை..! - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேசத்தில் மதமாற்ற கும்பலின் மூளையாக செயல்பட்ட சங்கூர் பாபா என்ற ஜலாலுதீன் என்பவருக்கு எதிராக அமலாக்கத்துறை அதிகாரிகள், விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், அவர் சார்ந்த தகவல்களை மாவட்ட நிர்வாகம், போலீஸ் அதிகாரிகள் மற்றும் வங்கிகளிடம் கேட்டுள்ளனர்.

உ.பி.,யின் பல்ராம்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதமாற்ற நடவடிக்கைகளில் மாதம்பூர் பகுதியை சேர்ந்த சங்கூர் பாபா என்ற ஜலாலுதீன் என்பவரும் அவரது கூட்டாளியான நஸ்ரின் என்பவரும் ஈட்டப்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

சங்கூர் பாபாவுக்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்து பணம் வந்து வந்துள்ள நிலையில், அவர் அந்த பணத்தை தவறாக பயன்படுத்தி இருக்கலாம் எனவும், சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலும், நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பணமோசடி தடுப்பு சட்டம், எப்சிஆர்ஏ சட்டத்தின் விதிமுறைகள் ஆகியன மீறப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

சங்கூர் பாபா மற்றும் அவர் தொடர்புடைய நபர்கள் பெற்ற பணம் எங்கிருந்து வந்தது என்பதை கண்டறியும் வகையில் விசாரணை நடந்து வருகிறது. இ்த பணத்தை வைத்து அவர் சட்டவிரோத மதமாற்றத்திற்கும், சட்ட விரோத செயல்களுக்கும் பயன்படுத்தி இருக்கலாம் என அமலாக்கத்துறை சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில், சங்கூர் பாபா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் நகல், அவருடன் கைது செய்யப்பட்ட நபர்கள், வங்கிக்கணக்குகள் ,அசையும் மற்றும் அசையா சொத்துகள் குறித்த விவரங்களை மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளரிடம் கேட்டுள்ளனர். அத்துடன், மாவட்ட ஆட்சியர் மற்றும் வங்கி அதிகாரிகளிடமும் அவரின் சொத்து குறித்த விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Enforcement Directorate has initiated an investigation into Sangur Baba for illegal conversio


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->