4 வயசு மகனை அடித்த தந்தை! பேரனுக்காக மகனை துப்பாக்கியால் சூட்ட தாத்தா கைது! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் பேரனை மகனும் மருமகளும் அடித்ததால் ஆத்திரத்தில் மகனை காலில் சூட்ட முதியவர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பாராளுமன்றத்தில் சிஆர்பிஎப் வீரராக வேலை பார்த்து வந்த முதியவர் ஓய்வு பெற்ற நிலையில், வங்கியில் பாதுகாப்பு அதிகாரியாக தற்போது வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், நாக்பூரில் உள்ள சிந்தாமணி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு நான்கு வயதில் மகன் வழி பேரன் இருந்துள்ளார்.

பேரனை மகனும் மருமகளும் அடிக்கடி அடித்து வந்ததாக கூறப்படுகிறது. பலமுறை முதியவர் எடுத்துக் கூறியும் கேட்காமல் குழந்தையை அடித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு 4 வயதான குழந்தையை மகனும் மகளும் அடிப்பதை பார்த்து கோபம் அடைந்த அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், முதியவர் லைசென்ஸ் பெற்று வைத்திருந்த ரைபிள் துப்பாக்கியால் மகனை சுட்டுட்டார். துப்பாக்கி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் முதியவரை கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். காலையில் குண்டு பாய்ந்து அவரது மகன் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Elderly man arrested for attempted murder of son


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->