அசாமில் யானைத் தாக்கி எட்டு வயது சிறுவன் பலி.! - Seithipunal
Seithipunal


அசாமில் யானைத் தாக்கி எட்டு வயது சிறுவன் பலி.!

அசாம் மாநிலத்தில் உள்ள கோலாகாட் மாவட்டம், நுமாலிநகர் அருகே ஷியாம்ராய்பூர் தேயிலைத் தோட்டம் உள்ளது. இந்தத் தேயிலைத் தோட்டத்திற்குள் நேற்று நள்ளிரவு உணவு தேடி காட்டுயானைக்கூட்டம் வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்தக் காட்டுயானைகள் தேயிலைத் தோட்டத்திற்கு அருகில் இருந்த 50 வீடுகளை அழித்து நாசப்படுத்தின. இதில் ரோஹித்குமார் என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அந்த சிறுவனின் பெற்றோர் படுகாயமடைந்தனர். 

இதையடுத்து அந்த யானைகள் அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்திற்குத் திரும்பிச் சென்றன. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்த சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஷியாம்ராய்பூர் பகுதியில் காட்டு யானைக்கூட்டம் முகாமிட்டு உள்ளதால் அவற்றை அங்கிருந்து காட்டுப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யானை கூட்டமாக முகாமிட்டுள்ளதால் அப்பகுதி மக்களிடையே பெரிதும் பதற்றம் நிலவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eight years old boy died in assam for attack elephant


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->