ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் படுகாயம் - மேற்கு வங்கத்தில் சோகம்.!!
eight peoples injured in west bengal railway station for crowd
மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள பர்தமான் ரயில் நிலையத்தில் நேற்று மாலை 4 மற்றும் 5வது நடைமேடைகளில் ஒரே நேரத்தில் ரெயில்கள் வந்துள்ளது. இந்த ரெயில்களில் ஏறவும் இறங்கவும் பயணிகள் முண்டியடித்து முயன்றதால் ஏராளமானோர் கீழே விழுந்தனர்.
இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி ஐந்து பெண்கள் உட்பட 8 பயணிகள் காயமடைந்தனர். அவர்களுக்கு ரெயில்வே மருத்துவர்கள் முதலுதவி அளித்த பின்னர் சிகிச்சைக்காக பர்தாமன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்

பண்டிகை கால கூட்டம் காரணமாக ரெயில் நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
eight peoples injured in west bengal railway station for crowd