கடைசி நேரத்தில்.. ஆந்திராவை முந்திய மேற்கு வங்கம்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் தற்போது 18-வது நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்படும் அறிவிக்கப்பட்ட நேற்றுடன் 4 கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. 

நேற்று இரவு 11:45 மணி நிலவரப்படி 4ம் கட்ட வாக்குப்பதிவில் 67.25% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகளில் 78.37% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து ஆந்திர பிரதேசத்தில் 25 தொகுதிகளில் 76.5%, ஒரிசாவில் 4 தொகுதிகளில் 73.97%, மத்திய பிரதேசத்தில் 8 தொகுதிகளில் 70.98%, தெலுங்கானாவில் 17 தொகுதிகளில் 64.74%, ஜார்க்கண்டில் 4 தொகுதிகளில் 65.2%, உத்தரபிரதேசத்தில் 13 தொகுதிகளில் 58.05%, பீகாரில் ஐந்து தொகுதிகளில் 57.06%, குறைந்தபட்சமாக ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதியில் 37. 98% வாக்குகள் பதிவாகியுள்ளது. 

இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது முதல் ஆந்திர பிரதேசம் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த நிலையில் இறுதியாக அதனை முந்திய மேற்கு வங்கம் 78.37 சதவீத வாக்குகளை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்கள் அனைத்தும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தோராயமாக மதிப்பிடப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. 

மேலும் நான்காம் கட்ட தேர்தலில் பதிவான சரியான வாக்கு சதவீதம் கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ECI announced 4rh phase approximate polling vote


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->