ஜம்மு காஷ்மீரில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரில் (வியாழக்கிழமை) நேற்று மதியம் 12.4 மணியளவில் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் ஜம்முவின் தோடா பகுதியிலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் 33.21 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 75.72 டிகிரி கிழக்கே தீர்க்கரேகையிலும், ரிக்டர் அளவில் 3.2ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி 8ஆம் தேதி கிஷ்த்வார் மாவட்டத்தில் இரவு 11.15 மணியளவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 3.6 ரிக்டர் அளவிலும், முன்னதாக ஜனவரி 5ஆம் தேதி 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Earthquake of 3 point 2 magnitude hits Jammu Kashmir


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->