பள்ளியின் கெமிஸ்ட்ரி வகுப்பறையில் போதைப்பொருள் தயாரிப்பு! நாட்டையையே அதிரவைத்த சம்பவம்!
Drugs Hyderabad school Chemistry lab
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேதா என்ற தனியார் பள்ளியில், பள்ளி நிர்வாகி மலேலா ஜெய பிரகாஷ் கவுட் தலைமையில் போதைப்பொருள் உற்பத்தி நடைபெற்று வந்தது போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
அங்கு மாணவர்கள் கீழ்தள வகுப்பறைகளில் படித்து கொண்டிருக்க, மேல்தளத்தில் உள்ள கெமிஸ்ட்ரி ஆய்வகத்தில் Alprazolam என்ற போதைப்பொருள் கடந்த ஆறு மாதங்களாக தயாரிக்கப்பட்டு வந்தது. வார நாட்களில் தயாரிக்கப்பட்ட போதைப்பொருள், பள்ளி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியே கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இச்செய்தி போலீசாருக்கு கிடைத்ததை அடுத்து நடத்திய சோதனையில், 7 கிலோ Alprazolam, 21 லட்சம் ரூபாய் பணம், உற்பத்திக்கான மூலப்பொருட்கள் மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன. சம்பவத்தில் தொடர்புடைய ஜெய பிரகாஷ் கவுட் மற்றும் அவரின் இரு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
பள்ளி வளாகத்துக்குள் இத்தகைய சட்டவிரோத செயல்பாடு நடைபெற்றது அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Drugs Hyderabad school Chemistry lab