இனி கோவில்களில் ஆடை கட்டுப்பாடு.. மாநில அரசு அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவில் கோவில்கள் கூட்டமைப்பு சங்கம் நாக்பூர் நகரில் உள்ள 4 கோவில்களில் ஆடை கட்டுபாட்டை அறிவித்துள்ளது.

இதுகுறித்து கோயில்கள் கூட்டமைப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சினில் கன்வாட் பேசியதாவது, மகாராஷ்டிரா மாநில கோயில் கூட்டமைப்பு சங்கம் மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் ஆடை கட்டுப்பாட்டை கொண்டுவர முடிவு செய்துள்ளது.


 இதில் முதற்கட்டமாக நாகூரை சேர்ந்த தாந்தோலியில் உள்ள கோபாலகிருஷ்ண கோவில், பெலோரியில் உள்ள சங்கத்மோச்சன் பஞ்சமுக அனுமன் கோவில், கனோலிபாராவில் உள்ள பிரகஸ்பதி கோவில் மற்றும் ஹில்டாப் பகுதியில் உள்ள துர்கமாதா கோவில் ஆகிய நான்கு கோவில்களில் இந்த ஆடை கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்த குறிப்பிட்ட கோயில்களில் பக்தர்கள் ஆட்சேபனைக்குரிய மற்றும் அநாகரீகமான ஆடைகளை அணிந்து வரக்கூடாது. கோயில்களில் புனித தன்மையை பாதுகாப்பது இந்த ஆடை கட்டுப்பாட்டில் முக்கிய நோக்கம் என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dressing code in Maharashtra temples


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->